Top posting users this month
No user |
கேலி கிண்டலுக்கு ஆளான நடிகர் விஜய்: கொந்தளித்த ரசிகர்கள் பொலிசில் புகார்
Page 1 of 1

நடிகர் விஜய்யை இணையதளம் மூலம் கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அவருடைய ரசிகர்கள் பொலிசில் புகார் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் நேற்று இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், இன்று மதுரையில் உள்ள விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள், மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், நடிகர் விஜய் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக விஜய்யையும், அவருடைய குடும்பத்தாரையும் இணையதளம் மூலம் அவமானப்படுத்தியும், அருவருக்கத்தக்க, சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்தும் வந்து கொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் இருந்த பக்கம் நீக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் அந்தப் பக்கம், தற்போது வேறு பெயரில் செயல்படத்தொடங்கி, வழக்கம்போல் அவதூறுகளை பரப்பி வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள லட்சோப லட்ச விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.
எனவே விஜய் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் இணையதளத்தை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள அருவருக்கத்தக்க பக்கங்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல தேனி மற்றும் தமிழகத்தின் பல நகரங்களிலும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், காவல்துறையிடம் புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum