Top posting users this month
No user |
தமிழக முதல்வரை நடிகர் சங்கப் பிரச்சனை குறித்து சந்திப்போம்: நடிகர் விஷால் அதிரடி
Page 1 of 1

நடிகர் சங்கப் பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட நாடக நடிகர்களின் கலை குடும்பத்தின் சந்திப்பு விழா சேலத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நடிகர்கள் விஷால், நாசர், கருணாஸ், பொன்வண்ணன், சரவணன் ஆகிய 5 பேரும் சேலம் நாடக நடிகர்களைச் சந்தித்து நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. புதிய கட்டடம் கட்டுவதில் ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்தத் தவறுகளை தட்டிக் கேட்டால் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சீர்குலைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாங்கள் ஓட்டுக் கேட்பதற்காக இங்கே வரவில்லை, உங்களைச் சந்தித்து நடிகர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம்.
நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சனைகளை முதலில் அலுவலகத்தில் முறையாக கேட்டேன் தவறு என்றார்கள்.
அடுத்து அலுவலகத்திற்கு போய் கேட்டேன், தவறு என்றார்கள். அடுத்து வீட்டு வாசலில் போய் நின்று கேட்பேன்.
தேர்தலில் நிற்பது என்பது முடிவாகிவிட்டது. வெற்றித் தோல்வியைப் பற்றி கவலைப்படவில்லை. முறையாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து முன்னனி நடிகர்களையும் திரட்டி கூட்டம் நடத்துவோம். அப்போது எங்கள் அணியின் முழுத்தோற்றம் தெரியும்.
எங்களுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான் நாடக நடிகர்களும் நடிகர் சங்கமும் காப்பாற்றப்பட வேண்டும்.
விரைவில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்கிற முறையிலும் தமிழக முதல்வரை சந்தித்து நடிகர் சங்க பிரச்சனைகளை எடுத்துக்கூற இருக்கிறோம்.
மேலும், அப்போது வாக்களிக்க அவரையும் அழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum