Top posting users this month
No user |
Similar topics
எதிர் கட்சிகளின் கடும் ரகளையால் போர்க்களமான சட்டசபை: ஆளுநர் கடும் கண்டனம்
Page 1 of 1

கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கலின் போது எதிர் கட்சிகள் ரகளையில் ஈடுபட்டதால் சட்டசபையே பெரும் போர்க்களம் ஆனது.
கேரள கடந்த 13ம் திகதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக உள்ள மாணி மீது, பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் உள்ளதால் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளன.
ஆனால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மாணி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து கேரளாவில் நேற்று, சட்டசபையில் நடந்த ரகளையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.
சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் ரகளைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு தினம் கடை பிடிக்கபோவதாக ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதற்கிடையே சட்டசபையில் நடந்த ரகளை பற்றி ஜனாதிபதிக்கு, அரசியல் சட்டப் பிரிவு 356–ன் கீழ் அறிக்கை அனுப்பப்படும் என்று கேரள ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயக கோவிலான சட்டசபையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே இல்லை.
மேலும், சட்டசபை கலவரம் தொடர்பாக ஜனாதிபதிக்கு, ஆளுநர் அறிக்கை அனுப்ப வேண்டும் என்பது மரபு என்பதால் நான் இதுபற்றி ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
» ரயிலில் பயணியை அறைவதா? ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
» குடியரசு தின விழா: மெரீனாவில் கொடியேற்றிய ஆளுநர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum