Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரகசியத்தை மறைத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

Go down

இரகசியத்தை மறைத்த பெண்ணுக்கு விளக்கமறியல்! Empty இரகசியத்தை மறைத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

Post by oviya Tue Mar 17, 2015 1:33 pm

தெமட்டகொட வடிகான் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனிதக் கால்கள் தொடர்பிலான இரகசியத்தை மறைக்கும் பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தெமட்டகொட - சிறிதம்ம மாவத்தையில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து இரு மனிதக் கால்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இவ்விரண்டு கால்களும் மீட்கப்பட்டன.

அந்த கால்கள் காணப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண் வெட்டப்பட்ட கால்கள் தொடர்பான தகவல்களை மறைக்கும் குற்றச்சாட்டுக்காக நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

இதேவேளை, கால்கள் மீட்கப்பட்ட அந்த வடிகானின் அருகில் இருந்து திறப்புக் கோர்வை ஒன்றையும் தெமட்டகொட பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை மோப்ப நாயிற்கு முகரச் செய்து சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவேளையிலே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண் குறித்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் ஆரம்பத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது வேறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அப் பெண் ஏதோ ஒரு இரகசியத்தை மறைக்கிறார் என்பதாலேயே அவரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அப்பெண் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளாரா இல்லையா என்பதைவிட அச்சம்பவம் குறித்து அவர் ரகசியம் ஒன்றினை அறிந்திருப்பதாகவும் அதனை மறைத்து வருவதாலேயே அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum