Top posting users this month
No user |
ஆண் மரபணு கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்: மருத்துவர்களின் சாதனை
Page 1 of 1

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆண் மரபணு கொண்ட பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
மீரட்டில் வசித்து வந்த மாயா என்ற பெண், ஆண் மரபணு(XY) கொண்டவர். ஆனால் வெளிப்படையாக பெண் தன்மை கொண்டவர், பெண்களின் குணத்தை கொண்டவர்.
இதுபோன்றவர்களுக்கு கருவுறும் செயல்பாடு இருக்காது, கருமுட்டைகள் உற்பத்தியும் இருக்காது, இவையனைத்தும் கருவுறுதலுக்கு மிகவும் தேவையானது.
மாதவிடாய் மற்றும் பருவமடைதல் போன்ற சம்பவங்களும் மாயாவுக்கு கிடையாது. XY (ஆண்களின் குரோமோசோம்) குரோமோசோம்கள் கொண்ட அவரிடம் குறைகளை கண்டறிய மருத்துவர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.
எனினும் அவருக்கு கிடைத்த கருணையாக, குழந்தைக்கான கருப்பை இருந்தது. அவருக்கு ஹார்மோன் மற்றும் சுரப்பிகளின் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற அந்தபெண்ணின் ஆசையை நிறைவேற்ற இச்சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
கர்ப்பம் அடையும் விதமாக கர்ப்பபையை ஒருநிலைய அடைய செய்வது மிகவும் சவாலாக இருந்தது. மற்றவர்கள் நன்கொடையாக அளித்த கருமுட்டைகள் அவரின் கருப்ப பையில் வைக்கப்பட்டது.
இதனையடுத்து மாயா கர்ப்பம் அடைந்தார், ஆனால் அவரின் உடல்வாக்கு கருவுறுதலுக்கு ஏற்றவகையில் இல்லாதபோது எப்படி குழந்தையை 9 மாதங்கள் கர்ப்பப்பையில் வளரசெய்வது என்ற சிக்கல் இருந்தது.
இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் பெண் பாதுகாப்பான முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கருவுற்றல் நிபுணர் கே.டி. நாயர் கூறியதாவது, இதுபோன்று ஆண் மரபணுக்கள் கொண்டு பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் அரிதானது.
இதுபோன்று பிரச்சனை கொண்ட பெண்கள் குழந்தை பெறுவது என்பது உலகம் முழுவதும் வெறும் 4 முதல் 5 வரையிலான பெண்களுக்கே சாத்தியமாகியுள்ளது. எனவே இது உண்மையிலே ஒரு மிகப்பெரிய சாதனை தான் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum