Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊடகங்கள் மஹிந்த பக்கம்: ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு
Page 1 of 1

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அரச ஊடக நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு சார்பாக அரச ஊடகங்கள் மிக மோசமான முறையில் செயற்பட்டுள்ளன என ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கிய அரச ஊடக நிறுவனங்கள் செயற்பட்டது மாத்திரமன்றி அவருக்கு எதிராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன மீது சேறு பூசும் வகையில் செய்திகளை வெளியிட்டது என குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச ஊடக நிறுவனங்கள் பொது மக்களின் சொத்துக்கள் எனும் ரீதியில் பக்கசார்பற்ற பொது நிறுவனங்களாக செயற்பட்டனவா என குறித்து ஆராயப்பட்ட போதே இவ்விபரங்கள் வெளியாகியுள்ளன.
அரச தொலைக்காட்சி, வானொலி, மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகங்களின் தேர்ததலுக்கு முன்னரான ஒரு மாத கால செயற்பாடுகளை குறித்த நிறுவனம் ஆராய்ந்ததன் பின்னரே இவ் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த டிசம்பர் மாதம் 20 முதல் 26ம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய தொலைக்காட்சியின் இரவு 8 மணி செய்திக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நேரம் 231 நிமிடங்கள், 25 வினாடிகள் ஆகும்.
அதில் தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் செய்திகளுக்காக 4 நிமிடங்களும், 17 வினாடிகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கட்சி கருத்துக்களை வெளியிடுவதற்கு 78 நிமிடங்கள் 57 வினாடிகளும், ஜனாதிபதி மைத்திரிபாலவின் கட்சியின் கருத்துக்களை வெளியிடுவதற்கு 42 நிமிடங்களும் 31 வினாடிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும் வேறெந்த வேட்பாளர்களுக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை என குறித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வசந்தம் தொலைக்காட்சி தேர்தல் காலத்தில் செய்திகளுக்காக ஒதுக்கியிருந்த 323 நிமிடங்களில் 197 நிமிடங்கள் தேர்தலுடன் தொடர்புடையவை அதில் 135 நிமிடங்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கு 13 நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே, லேக்ஹவுஸ் அரச ஊடக நிறுவனத்தின் அச்சு ஊடகங்களும் மகிந்த ராஜபக்ஷவுக்கே முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிட்டிருந்ததாகவும் ஏனைய வேட்பாளர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் தமிழ் மொழி மூல அரச ஊடக செய்திகளை கண்காணித்து அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் ரவி ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கக்கூடிய விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்,
ஊடகங்களை நெறிப்படுத்துவதற்கான சுயாதீன ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி தேர்தலின் போது தென்னந்தோப்பில் பதுங்கியிருந்த மைத்திரிபால
» குற்றவாளியான ரஞ்சனி ஜயகொடி தொடர்ந்தும் பதவியில் உள்ளார்: ஊடகங்கள் குற்றச்சாட்டு
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum