Top posting users this month
No user |
Similar topics
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: கெஜ்ரிவால் முன்னிலை, ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்
Page 1 of 1

டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி 61 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது.
தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையும் அதையே பிரதிபலிக்கின்றன.
ஆம் ஆத்மி 61 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பாஜக 07 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் பின்னடவை சந்தித்துள்ளது.
ஆத் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம்
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறுவதை அடுத்து அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி பின்னடைவை சந்தித்துள்ளார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளரைவிட 242 ஓட்டுக்கள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார்.
மேலும், டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, வாழ்த்துக்கள், விரைவில் இணைந்து பணியாற்றுவோம், டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு உங்களுக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக தொடர்ந்து முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
» வெற்றியால் உணர்ச்சிவசப்படவில்லை.. முடிவு கட்ட தயாராகிறோம்: டெல்லி நாயகன் கெஜ்ரிவால்
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum