Top posting users this month
No user |
மீண்டும் டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்!
Page 1 of 1

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க உள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்து உள்ளன.
அதிக பட்சமாக அக்கட்சி 53 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனாலும், பா.ஜ.க. எடுத்த கருத்து கணிப்பில், அந்த கட்சிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் கருத்துக்கணிப்புகளை மிஞ்சும் அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
முன்னணி நிலவரம்:
ஆம் ஆத்மி - 65
பா.ஜ.க. - 4
காங்கிரஸ் - 0
மற்றவை - 1
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெறுவதை அடுத்து அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum