Top posting users this month
No user |
டெல்லி சட்டசபைத் தேர்தல்: பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
Page 1 of 1

டெல்லி சட்டசபை தேர்தலில் கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி சமீபத்தில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து வருகிற டெல்லி சட்டசபை தேர்தலில் கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக முனைப்பு காட்டி வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய பாஜகவை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தற்போது ஜனாதிபதி ஆட்சி ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், டெல்லியில் சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி 7ம் திகதி நடைபெற உள்ளது.
டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தற்போதிய அரசியல் சூழ்நிலையை பொருத்த வரையில், டெல்லியில் ஒரு ‘வலுவான’ முதல்வர் வேட்பாளரை நிறுத்த பாஜகவில் வேட்பாளர்கள் இல்லை.
இதனால், ஆம் ஆத்மி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரண் பேடி இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பதாலும், லஞ்சத்திற்கு எதிராக போராடி வருபவர் என்பதாலும் டெல்லியில் அவருக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கும் என பாஜக நம்புவதாக தகவல்கள் வெளியாகயுள்ளன.
இந்த மாதம் 19ம் திகதி பாஜக தனது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum