Top posting users this month
No user |
Similar topics
என்ன கருணாநிதிக்கு 92 வயசாயிருச்சா? ஆச்சரியத்தில் மூழ்கிய நீதிபதி
Page 1 of 1

திமுக தலைவர் கருணாநிதியின் வயதை கேட்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாராசாமி ஆச்சரியப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்து ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் விசாரணைக்கு வந்தது.
தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன் எழுந்து நீதிபதியிடம் தமிழக அரசு ஊழியர் விதிமுறை 1972 என்ற புத்தகத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.
அதை வாங்கி பார்த்த நீதிபதி, புத்தகத்தில் என்ன உள்ளது என்பதை சுருக்கமாக செல்லுங்கள் என்று கேட்டார்.
அதையேற்று பேசிய வழக்கறிஞர் குமரேசன், அரசு ஊழியராக இருப்பவர் எப்படி செயல்பட வேண்டும், அவரின் சொத்து கணக்கை காட்ட வேண்டும், தனக்கு சொந்தமான சொத்து எப்படி வந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும், பணியில் இருக்கும் காலத்தில் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் பரிசு பொருள் கிடைத்தால் அதை சொந்த தேவைக்கு பயன்படுத்தாமல், அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல விளக்கங்களை கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முதல்வர், அமைச்சர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் பரிசு பெறுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, அரசு பதவியில் இருக்கும்போது சம்பளமாகவோ அல்லது கவுரவ தொகை பெறும் மக்கள் பிரதிநிதிகளும் அரசு பொது ஊழியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் அரசு ஊழியராக இருப்பவர்களுக்கு என்னென்ன விதிமுறை உள்ளதோ, அது அரசு பொது ஊழியருக்கும் பொருந்தும் என்றார்.
மேலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் பர்சனல் இன்பர்மெடிவ் சிஸ்டம் என்ற விதிமுறைபடி அரசு ஊழியராக இருப்பவர் தனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து முழு விவரம் கொடுக்க வேண்டும் என்று உள்ளது.
இது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பொது ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறினார்.
தாங்கள் கொடுத்த தகவல் மூலம் முழு விவரம் கிடைத்தாக நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான வாதத்தின் போது ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் வாதிட்டபோது நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை சந்தாதாரர்கள் மூலம் ரூ.14 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை தொடங்க வேண்டியதின் அவசியமென்ன என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் யோசித்தபோது உடனே எழுந்த தி.மு.க. வழக்கறிஞர் குமரேசன், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் மு.கருணாநிதி, முரசொலி என்ற நாளிதழை கட்சிக்காக தொடங்கினார்.
அதை பார்த்து, ஜெயலலிதாவும் நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை தொடங்கினார் என்றார்.
அதை கேட்ட நீதிபதி ஓ...நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை தொடங்க முரசொலி மூளையாக இருந்துள்ளது என்றார்.
அதை தொடர்ந்து கருணாநிதி என்ன செய்கிறார் என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு பதிலளித்த குமரேசன் கடந்த 1957ம் ஆண்டு முதல் முறை பேரவை தேர்தலில் போட்டியிட்டார். அன்று தொடங்கி இன்று வரை தோல்வியில்லாமல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏவாகவும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
தற்போது 92 வயதாகும் அவர் தொடர்ந்து கட்சியை வழிநடத்தி செல்கிறார் என்றார். அதை கேட்ட நீதிபதி என்ன. கருணாநிதிக்கு 92 வயதா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குற்றம்சாட்டப்பட்டவர்களே ஒப்புக்கொண்டதை விட குறைவாக நீதிபதி கணக்கீடு செய்ய காரணம் என்ன?
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்
» தி.மு.க.வை விட்டு நான் வெளியேறிய காரணம் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும்: நடிகை குஷ்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum