Top posting users this month
No user |
கல்லூரி பேராசிரியை கற்பழித்துக் கொலை: 3 மாதங்களுக்கு பின் சிக்கிய கொலையாளி
Page 1 of 1

கோயம்புத்தூரில் கல்லூரி பேராசிரியையை கற்பழித்து கொலை செய்த நபர் 3 மாதங்களுக்கு பின் பொலிசில் சிக்கியுள்ளான்.
கோயம்புத்தூர் மாவட்டம் தர்மராஜ், மாலதி தம்பதியினரின் மகள் ரம்யா (24) தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த நவம்பர் 3-ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற ரம்யா, நவம்பர் 4-ஆம் திகதி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். மாலதி சுயநினைவு இல்லாமல் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரமடை பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கின் தொடக்கத்தில், மயக்க நிலையில் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலதி கண்விழித்தால் அனைத்து தகவல்களும் கிடைக்கும் என்று நம்பியிருந்த பொலிசாருக்கு, மாலதி அளித்த தகவல்கள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தின.
இதனால் வழக்கில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. இதற்கிடையில் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளின்படி கொலை செய்யப்பட்ட போது ரம்யா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிய வந்தது.
இத்தகைய சூழல்களால் வழக்கை துரித விசாரணைக்கு உட்படுத்திய பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய முக்கிய நபர் கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பழையூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருப்பதாக பொலிசாருக்கு தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு அவரது வீட்டில் பொலிசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கே.மகேஷ் என்கிற டேனியல் (28) என்பது தெரிந்தது. பிடிபட்ட அவரிடம் பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொலை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கொலை நடைபெற்ற வீட்டில் இருந்து திருட்டுப் போன நகையை அடகு வைத்ததன் மூலமாக இவரை பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மற்றொருவரை தேடி வருகிறோம்.
பிடிபட்ட நபர் ஏற்கெனவே பல்வேறு வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் திருடச் சென்ற டேனியல் இந்த கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொலையாளி அடகு வைத்த நான்கு பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. துடியலூரில் உள்ள ஒரு தள்ளு வண்டியில் போண்டா விற்பனை செய்யும் ஒருவர் மூலமாக நகையை விற்பனை செய்துள்ளார்.
இதை தொடர்ந்துதான் கொலையாளியை அடையாளம் கண்டனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum