Top posting users this month
No user |
நாய்க்கு மது கொடுத்ததை தட்டிக்கேட்ட பெண்: கற்பழித்துக் கொலை செய்த கொடூரர்கள்
Page 1 of 1

கொடைக்கானலில் நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண்ணை 3 நபர்கள் சேர்ந்து கற்பழித்து கொலை செய்துள்ளனர்.
கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த பிரதீப் அலெக்ஸ்சாண்டர் என்பவரது வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி (25) என்பவர் 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை கற்பழித்து கொலை செய்துள்ளனர்.
இதில் பாண்டி செல்வி போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, 2 பேர் தப்பி ஓட, ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டார், பொலிசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் பியர்சோழா ரோட்டில் தனியார் காட்டேஜில் வேலை பார்த்து வந்தேன்.
மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறை எடுத்து கொடுக்கும் வேலையும் பார்த்து வருகிறேன்.
என்னை தேடி எனது நண்பர்கள் அடிக்கடி கொடைக்கானல் வருவது வழக்கம். அதுபோல் கடந்த 6 ஆம் திகதி ஜெகதீசபாண்டியும், சக்திவேலும் வந்தனர். நாங்கள் 3 பேரும் காட்டேஜில் மது குடித்து கொண்டிருந்தோம்.
அப்போது எங்கள் காட்டேஜ் அருகில் உள்ள பிரதீப் அலெக்ஸ்சாண்டரின் நாய் குரைத்து கொண்டே இருந்தது. நாங்கள் அதற்கு மதுவும், பிரியாணியும் கொடுத்தோம்.
இதைப்பார்த்ததும், பாண்டி செல்வி எங்களை திட்டிவிட்டு நாயை அழைத்து சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட பாண்டி செல்வி எங்களை திட்டி கொண்டே இருந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரது வீட்டிற்குள் சென்றோம். ஆனால், எங்களை வீட்டிற்குள் விடாமல் அவர் கதவை அடைத்து கொண்டார்.
ஆனாலும் கதவை தள்ளிக் கொண்டு 3 பேரும் உள்ளே சென்று பாண்டி செல்வியை சரமாரியாக தாக்கினோம். அப்படியும் எங்களுக்கு ஆத்திரம் தீராததால், அவரது ஆடைகளை களைந்து கற்பழித்தோம்.
அப்போது பாண்டி செல்வி சத்தம் போட்டதில், விடயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அவரை கத்தியால் குத்தினோம். இதில், ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி அதே இடத்தில் இறந்து போனார்.
உடனே என்னுடன் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நானும் தப்ப வெளியே சென்றபோது அக்கம்பக்கத்தினர், போதையில் இருந்த என்னை சரமாரியாக தாக்கி பொலிசில் ஒப்படைத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
பொலிசார் தப்பியோடிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum