Top posting users this month
No user |
Similar topics
துபாயில் பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் வென்ற அதிஷ்ட குழந்தை
Page 1 of 1

கேரளாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையின் அதிர்ஷ்டத்தால் 1,40,000 திர்ஹம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அனில் ஜனார்த்தன் என்பவர் துபாயில் வேலை செய்தபடி, தனது மனைவியுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு நித்தேரா என பெயர் சூட்டியுள்ளனர்.
கேரள வழக்கப்படி, குழந்தை பிறந்த 28-ம் நாள் நித்தேராவின் கழுத்துக்கு ஒரு சிறிய தங்கச் சங்கிலியும், கைகளுக்கு தங்க வளையல்களும் வாங்க ஒரு நகைக் கடைக்குச் அனில் சென்றுள்ளார்.
அப்போது நகைகளுடன் வழங்கப்பட்ட மூன்று அதிர்ஷ்ட சீட்டுகளில் தனது மகள் நித்தேராவின் பெயரை பூர்த்தி செய்து பெட்டியில் போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
சில நாட்களுக்கு பின்னர் அவரது கைபேசிக்கு வந்த அழைப்பில் எதிர்முனையில் இருந்து பேசியவர்கள் உங்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது என்றும் நீங்கள் அந்த தொகைக்கு எங்களிடம் இருந்து தேவையான நகைகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தனது நண்பர்களில் யாரோ கேலி செய்வதாக நினைத்து அதனை கண்டுகொள்ளாத அனில், இது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
அந்த நண்பர் மேற்கொண்டு விசாரித்ததில் நித்தேராவின் பெயர் கொண்ட அதிர்ஷ்ட சீட்டுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அதிர்ஷ்டக்கார மகள் மற்றும் மனைவியுடன் அந்த நகைக் கடைக்கு சென்ற அனில், சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளோடு வீடு திரும்பியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு என பல தடைகளை வென்ற 762 கிராம் குழந்தை!
» துபாயில் தினமும் 12 மணிநேரத்தை மேகக் கூட்டத்துக்கிடையே கழிக்கும் இந்தியர்
» சன் குழுமத்தின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வழக்கு.. செப்ரெம்பர் 7ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum