Top posting users this month
No user |
Similar topics
மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு என பல தடைகளை வென்ற 762 கிராம் குழந்தை!
Page 1 of 1

பெங்களூரில் வளர்ச்சி தடைபட்டு வெறும் 762 கிராம் எடையில் பிறந்த குழந்தை ஒன்று, மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு என பல தடைகளை தாண்டி வந்துள்ளது.
பெங்களூரில் பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் கர்ப்பமடைந்து, 6-வது மாதம் செய்த ஸ்கேனில், சிசுவின் வளர்ச்சி நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த நேகா அதை நம்ப முடியாமல் வேறு பல இடங்களிலும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.
ஆனால் சிசுவின் வளர்ச்சி தடைபட்டிருப்பது உறுதியானதை அடுத்து, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சிசுவின் உயிரைக் காப்பாற்ற கர்ப்பத்தின் 26-வது வாரத்தில் வளர்ச்சியடையாத அந்த சிசுவைப் பெற்றெடுத்தார்.
அட்டு என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை, வெறும் 762 கிராம் எடையுடன் பிறந்ததோடு, நிமோனியா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டான்.
அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அந்தப் பச்சிளம் குழந்தைக்கு மூன்று முறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நேகா வியாஸ் கூறுகையில், ஐசியு-வில் முதன் முறையாக எங்கள் அட்டுவை பார்க்கும் போது இந்தச் சின்ன உடலைக் கொண்டு எப்படி இவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டான் என்றுதான் தோன்றியது.
சிசுவின் முழுவளர்ச்சிக்கு முன்பாக குழந்தை பெறுவதென்பது மிகவும் துயரமான அனுபவம் என்றும், இப்போது அட்டு நன்றாக இருக்கிறான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது 6 மாதமாகும் அட்டு 3.46 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கருப்பை போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துபாயில் பல லட்சம் மதிப்பிலான வைர நகைகள் வென்ற அதிஷ்ட குழந்தை
» மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
» மன உளைச்சல்! ஜனாதிபதியின் பிரதான சோதிடருக்கு திடீர் மாரடைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum