Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா பொழப்பு சிரிப்பா போச்சு: மிஸ்ட் கால் கட்சி “பா.ஜ.க”: வெளுத்து வாங்கும் பிரேமலதா விஜயகாந்த்

Go down

ஜெயலலிதா பொழப்பு சிரிப்பா போச்சு: மிஸ்ட் கால் கட்சி “பா.ஜ.க”: வெளுத்து வாங்கும் பிரேமலதா விஜயகாந்த் Empty ஜெயலலிதா பொழப்பு சிரிப்பா போச்சு: மிஸ்ட் கால் கட்சி “பா.ஜ.க”: வெளுத்து வாங்கும் பிரேமலதா விஜயகாந்த்

Post by oviya Sat Jan 10, 2015 12:55 pm

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளை சரமாரியாக தாக்கி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பேசியதாவது, மக்களையே சந்திக்காம வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்குற ஜெயலலிதா எப்படி மக்கள் முதல்வராக இருக்க முடியும்?

ஜெயலலிதா, மக்களை சந்திக்காமல் வீட்டில் முடங்கி கிடப்பது ஏன்? அதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியாது.

எங்களோட 8 எம்.எல்.ஏக்களை எங்கக்கிட்ட பறிக்கணும்னு நினைச்ச ஜெய​லலிதாவோட நிலைமை இப்போ என்னாச்சு? தன் தொகுதியைக்கூட ஜெயலலிதாவால காப்பாத்திக்க முடியலை.

சட்டசபையில் நம்ம கேப்டன் பேசியதை கேட்டு ஜெயலலிதா குலுங்கிக் குலுங்கி சிரிச்சார். இப்போ ஊரே ஜெயலலிதாவை பார்த்துச் சிரிக்குது. நம்மைப் பாத்து சிரிச்சவங்க எல்லாம் அதலபாதாளத்துக்குப் போயிட்டாங்க.

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ்., அல்ல; அவரை, யு.பி.எஸ்., என்று தான் அழைக்க வேண்டும்.

அவருடைய செயல்பாடுகள் அப்படி தான் உள்ளது. தமிழ்நாட்டில் யு.பி.எஸ் ஆட்சிதான் நடக்கிறது.

பா.ஜ.க 'மிஸ்டு கால்' கட்சி. அக்கட்சியினர், மொபைல்போனில் 'மிஸ்டு கால்' கொடுத்து, கட்சியை வளர்க்கப் பார்க்கின்றனர்.

மிஸ்டு கால் மூலம், பூத்துக்கு, 100 புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அது சரியான அணுகுமுறை இல்லை. அதனால், நம் கட்சி நிர்வாகிகள் அப்படி செய்ய வேண்டியதில்லை.

இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா தி.மு.க குடும்பச் சிக்கலில் சிக்கித்தவிக்குது. எப்படிப் பார்த்தாலும் அ.தி.மு.க., தி.மு.க இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். ஊழலை எதிர்த்து கேள்வி கேட்குற ஒரே கட்சியா நாம இருக்கோம்.

கேப்டனை 100 வருஷம் நல்லா பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அவரோட அரசியலை பாதுகாக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் நிச்சயம் வீண்போகாது.

எனவே ஊழல் இல்லாத ஆட்சியை நம்ம கேப்டனால் மட்டும்தான் கொடுக்க முடியும். உங்கக்கிட்ட நான் கேட்டுக்கிறது எல்லாமே, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கணும். அப்படி சேர்த்துட்டீங்கன்னா அடுத்து நம்ம ஆட்சி​தான் என அதிரடியாக பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum