Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா நேரடியாக ஒடுக்குவார்.. கருணாநிதி ஆரத்தழுவி பின்னர் எதிர்ப்பார்: விஜயகாந்த்
Page 1 of 1

தமிழக மக்கள் விரைவில் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளிதழ் ஒன்றுக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கேள்வி: அரசியலில், தேமுதிக 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது கட்சியின் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜயகாந்த்: அதிமுக, திமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தில் மாறி, மாறி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செலுத்திவிட்டன.
இந்நிலையில் மக்கள் தேமுதிகவையே ஒரு ஆக்கபூர்வ மாற்றாகப் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் எங்களைத் தவிர வேறு எந்த கட்சியாவது 10% வாக்கு வங்கியை வைத்திருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா?
இது மக்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவின் வெளிப்பாடு. தமிழக மக்கள் விரைவில் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி வாய்ப்பை அளிப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
கேள்வி: அதிமுக அமைச்சர்கள் தமிழக அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்கின்றனரே?
விஜயகாந்த்: ஆமாம். நாங்கள் லேப்டாப் கொடுத்திருக்கிறோம். ஆடு, மாடு கொடுத்திருக்கிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர்.
நாங்கள் தமிழக அரசிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அரசு இத்தனை ஆண்டுகளில் ஏற்படுத்தித் தந்த வேலைவாய்ப்பு என்னவென்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி வருகிறோம்.
இந்த கேள்விக்கு அரசு இதுவரை பதில் தரவில்லை. இதில் அவர்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது?
ஜெயலலிதா தன்னை விமர்சிப்பவர்களை நேரடியாக ஒடுக்குவார். ஆனால், கருணாநிதி முதலில் ஆரத் தழுவி அரவணைத்து பின்னர் எதிர்ப்பை காட்டுவார்.
கேள்வி: அதிமுகவை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கிறாரே?
பதில்: அவரது நடை பயணம் கடந்த காலத்தில் திமுக செய்த தவறுகளுக்கு மக்களிடையே மன்னிப்பு கோரவே நடத்தப்படுகிறது.
இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம் திமுக ஊழலில் ஈடுபட்டது என்பதை திமுகவே ஒப்புக் கொண்டுள்ளது.
நீங்கள் இருக்கும் கட்சியே ஊழலில் திளைத்திருக்கும்போது உங்களால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அவர்கள் கைகளில் மீண்டும் ஆட்சி கிடைத்தால் பழங்கதை தொடர்கதையாகும்.
புதைகுழியில் கால் வைத்தால் மண்ணோடு மண்ணாக புதைந்து போவோம்.
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது புதைகுழியில் கால் வைப்பது போன்றது.
கேள்வி: தேமுதிக இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக பாஜக கூறிவருகிறதே?
விஜயகாந்த்: நாங்கள் இப்போதைக்கு எந்த ஒரு கூட்டணியிலும் இல்லை.
அதே வேளையில் எந்தக் கூட்டணியில் சேர வேண்டும் என்பதையும் இப்போதைக்கு நான் முடிவு செய்யவில்லை.
திமுக, அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: மக்கள் நல கூட்டியக்கத்தின் அழைப்புக்கு உங்கள் பதில் என்ன?
விஜயகாந்த்: மக்கள் நல கூட்டியக்கத்துக்கு எனது நன்றி, வாழ்த்துகள். அவர்கள் என்னுடன் கூட்டணி தொடர்பாக பேசினார்கள். ஆனால், முடிவெடுப்பதற்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது.
கேள்வி: தலித் அல்லாத சமூகத்தினர் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைப்போம் என்ற பாமகவின் பிரச்சாரம், தமிழகத்தை சாதி அடிப்படையில் பிரித்திருக்கிறதா?
விஜயகாந்த்: தேமுதிக ஒருபோதும் சாதி அரசியல் செய்யாது. எங்களுக்கு அனைவரும் சமமானவர்களே.
இன்று, பல்வேறு கட்சிகளும் பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்கின்றனர்.
ஆனால், பெரியார், அம்பேத்கர் கொள்கையை சிறிதும் பின்பற்றுவதில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
» ஜெயலலிதா தீர்ப்பு நிரந்தரமா..?? கருணாநிதி மத்தியரசு அடுத்த நகர்வில்..??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum