Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நீக்கிய பள்ளி நிர்வாகம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

Go down

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நீக்கிய பள்ளி நிர்வாகம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு Empty எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நீக்கிய பள்ளி நிர்வாகம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

Post by oviya Fri Nov 20, 2015 12:55 pm

மேற்கு வங்கத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஷாம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தெற்கு பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த துணிக்கடையில் வேலை செய்து வரும் நபர் ஒருவரின் மகன் படித்து வந்துள்ளான்.

கடந்த 2014ம் ஆண்டு வரை எழுது பொருள் அங்காடி நடத்தி வந்த அவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியானது.

அவர் மூலமாக அவரது மனைவிக்கும், மகனுக்கும் எய்ட்ஸ் நோய் பரவியதும் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் பொதுமக்களுக்கு தெரியவந்ததால் அவரது வியாபாரம் பாதிப்படைந்துள்ளது.

எனவே கடையை மூடிவிட்டு துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

அச்சிறுவன் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்ததால் பள்ளி தலைமையாசிரியர் பெற்றோர்களை அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது அவன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் அந்த மாணவனை இனி பள்ளிக்கு வரவேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அந்த சிறுவனின் பாட்டியை எயிட்ஸ் நோய் சோதனை செய்யுமாறு தலைமையாசிரியர் சொல்லியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்துள்ளனர்.

பின்னர் மாவட்ட நிர்வாகம் தலைமையாசிரியாரை அழைத்து விளக்கம் கேட்ட போது, மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு விடயம் தெரிந்ததால் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, அவரை எச்சரித்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum