Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்: முன்பகை காரணமா?

Go down

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்: முன்பகை காரணமா? Empty மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்: முன்பகை காரணமா?

Post by oviya Tue Nov 17, 2015 1:48 pm

ஆந்திர மாநிலம் சித்தூர் மேயர் அனுராதா, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தூர் நகராட்சி மேயர் அனுராதாவின் கணவர் கட்டாரி மோகன் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர்.

இன்று காலை சித்தூர் மேயர் அலுவலகத்தில் அவர் பணியில் இருந்தபோது, அவரை குறிவைத்து மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அனுராதா உயிரிழந்துள்ளார். காயமடைந்த அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பொலிஸார் கூறுகையில், முதற்கட்ட தகவலின்படி, இன்று மதியம் சித்தூர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மூவர் அனுராதாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதோடு, கத்தியாலும் குத்தியுள்ளனர்.

இதில் அனுராதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பின்னர் அவரது கணவர் கட்டாரி மோகனையும் கத்தியால் குத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து குற்றவாளிகள் தப்பிய நிலையில், சிறிது நேரத்தில், சித்தூர் ஐ டவுன் பொலிஸில் இருவர் சரணடைந்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

படுகொலையில் ஈடுபட்டவர்களில் இருவர் பர்தா அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர் என் தெரிவித்துள்ளனர்.

அனுராதாவை கொலை செய்த கும்பல் கர்நாடகத்தைச் சேர்ந்த கூலிப்படையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மொத்த 7 பேர் கொண்ட கும்பலில், குர்தா அணிந்த இருவர் உட்பட மூவர் மட்டும் மேயர் அறைக்குள் சென்றுள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum