Top posting users this month
No user |
Similar topics
மின்சாரம் வருமா? மன்னார் முதலைகுத்தி கிராம மக்கள் விசனம்
Page 1 of 1

மின்சார வசதிகள் இன்றி மன்னார் - உயிலங்குளம் முதலைகுத்தி கிராம மக்கள் பல்வேறு அசௌவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்திற்கு பின் 2009ம் ஆண்டுக்கு பிறகு கட்டம் கட்டமாக பல கிராமங்கள் கணிசமான அளவு அபிவிருத்தி செய்யப்பட்டது.
ஆனால் எது எவ்வாறாக இருந்தாலும் பல கிராமங்களில் அடிப்படைத் தேவைகள் கூட செய்து கொடுக்கபடாத கிராமங்கள் அதிகம் காணப்படுகிறது.
அதில் ஒரு கிராமம்தான் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட முதலைகுத்தி கிராமமாகும்
குறித்த கிராமத்தில் 53 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 41 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மிகுதியான 12 குடும்பங்களுக்கு இது வரை மின்சாரம் வழங்கப்படாததால் கடந்த பல ஆண்டுகளாக மின்சாரமின்றி, பாடசாலை மாணவர்கள் உட்பட கிராம மக்கள் பல்வேறு அசௌவுகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
யுத்த நிறைவின் பின் சாதமமாக சூழ்நிலை தோன்றியதை அடுத்து 2010 முதல் இக்கிராமத்திற்கு லக்சபான மின்சாரம் வழங்கப்பட்டிருந்தாலும் குறித்த கிராமத்தின் ஒரு பகுதி 30 வருடங்களுக்கு மேலாக இருளில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் மின்சாரத்தை பெறுவதற்காகவும் வழமான வாழ்கையினை வாழ்வதற்கும் தமது பிரச்சிணைகள் தொடர்பாக மன்னார் மின்சார சபை, மன்னார் பிரதேச சபை, மன்னார் பிரதேச செயலகம், மன்னாரின் அமைச்சர் ஒருவர் உட்பட பல்வேறுபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு குறித்த மின்சார பிரச்சினையை கொண்டு வந்திருந்த போதும் அது பலனளிக்கவில்லை என கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக மின்சாரம் தருவதாக கூறும் இவர்கள் வாய்பேச்சில் மட்டுமே அடிக்கடி மின்சாரத்தை வழங்குவதாகவும் உண்மையில் மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வடக்கின் வசந்தம் வேலைதிட்டத்திற்கு பொறுப்பானவர்களிடம் மின்சார பிரச்சினை தொடர்பாக தெரிவித்தபோது குறித்த கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் சில குழிகளை மட்டும் வெட்டி சென்றுள்ளனர்.
ஆனால் இன்றுவரை குறித்த அதிகாரிகள் மின்சாரத்தை பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடுத்தரவ வர்கத்தை சேர்ந்த சில குடும்பங்கள் சூரிய ஒழி மூலம் இயங்கும் மின்சார கருவிகளை (சோளர்) பயன்படுத்தி வருகின்றனர்.
இது கூட இல்லாத ஏழை குடும்பங்களும் இங்கு வாழ்துவரும் நிலையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பின்னடைவை சந்தித்து வருகிறது.
குறித்த கிராமத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன பிரதான தொழிலாக உள்ளதால், இப்பகுதி வயல்கள் சிறு சிறு பற்றைக்காடுகள் காணப்படுவதால் இரவு வேளைகளில் விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இக் கிராம மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியன பிரதான தொழிலாக காணப்பட்டாலும்; சுயதொழில்களை செய்வதற்கு மின்சாரம் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதுடன், மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த கிராமத்திற்கு மின்சாரத்தை பெற்றுதரக்கோரி பல்வேறு வழிகளிலும் இக் கிராம மக்களால் முயற்சிகள் மேற்கொள்ளபட்டாலும் அது கைகூடவில்லை என கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக அசமந்த போக்காக செயற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே குறித்த கிராமத்தில் பாதிக்கபட்டுள்ள குடும்பங்களுக்கு மின்சார வசதியினை பெற்று தரக்கோரி வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர்களது கோரிக்கை தீர்த்து வைக்கப்படுமா?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்
» விலை குறைக்கப்படாத அத்தியாவசிய பொருட்கள்: மலையக மக்கள் விசனம்!
» யாழ் குடாநாட்டில் புலி திரைப்படம்: இளைஞர் குழுக்களின் அட்டகாசம்! மக்கள் விசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum