Top posting users this month
No user |
விலை குறைக்கப்படாத அத்தியாவசிய பொருட்கள்: மலையக மக்கள் விசனம்!
Page 1 of 1

புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனாலும் விலை குறைப்பு செய்யப்பட்ட பல பொருட்கள் இன்னமும் பழைய விலைகளிலேயே விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என மலையகத்தின் பல பாகங்களிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.
குறிப்பாக நுவரெலியா, பதுளை மாவட்டங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மலையக பெருந்தோட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களான மண்ணெண்ணெய், கோதுமை மாவு, போன்ற பொருட்கள் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பால்மாக்களும் பழைய விலைக்கே விற்கப்படுகின்றன. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாட்டை தெரிவித்தால் நாங்கள் கவனிக்கிறோம் என்று மட்டுமே பதில் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மக்களின் சுமையை குறைக்கும் வரவு செலவு திட்டம் என அறிவித்து விட்டு விலைகளையும் குறைத்துள்ள அரசாங்கம் அது முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்காமலிருப்பது மக்களின் நலனில் அக்கறையில்லாதிருப்பதற்கு சமனாகும்.
அதை விட புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து தற்போது அமைச்சுப் பதவிகளில் இருக்கும் பிரதிநிதிகளும் இதை கண்டு கொள்வதாக இல்லை. ஜனாதிபதி எளிமையை பின்பற்றுகிறார் என்ற விடயத்தை முன்வைத்து இவர்களும் எளிமையாக கடமைகளை செய்வதாகக் கூறுகிறார்கள், இதில் தாம் ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.
சில வர்த்தக ஸ்தாபனங்களில் மண்ணெண்ணெய் லீற்றர் 70 ரூபாவுக்கு விற்கப்படுகிறது, அதுமட்டுமில்லாது சிலிண்டர் காஸ் ஒன்றிற்கு வழமையான விலையை விட 125 ரூபா அதிகமாக விற்கப்படுகிறது. கேட்டால் போக்குவரத்து செலவு என்றும் குறைவாக வாங்க வேண்டுமானால் பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று வாங்கிக் கொள்ளவும் என பதில் தரப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கைச் செலவு உட்பட பல விடயங்களில் தமக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மாற்றத்திற்காக வாக்களித்தோம், எனினும் மாற்றங்கள் அறிவித்தலாக உள்ளனவே ஒழிய அமுல்படுத்தக் காணோம் என சிலர் அங்கலாய்க்கின்றனர்.
இது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயம். ஆகவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா?

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum