Top posting users this month
No user |
Similar topics
சோயாபீன்ஸ் உருண்டை குழம்பு
Page 1 of 1
சோயாபீன்ஸ் உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் உருண்டைகள் – முக்கால் கப்
வெங்காயம்.– 1
தக்காளி. – 3
இஞ்சி. – விழுது 2 டீஸ்பூன்
பூண்டு. – விழுது 2 டீஸ்பூன்
சீரகம். – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி.– சிறிதளவு
கறிவேப்பிலை. – சிறிதளவு
மஞ்சள்தூள். – அரை டீஸ்பூன்
கடுகு. – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு. – அரை டீஸ்பூன்
சோம்பு. – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள். – தேவையான அளவு
உப்பு. – தேவையான அளவு
செய்முறை:
சோயா உருண்டைகளையைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருந்து, பின்பு நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைத்திருந்து எடுத்து, தோலுரித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, அரைத்த தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும், சோயா உருண்டைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் (தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்) விட்டு, வறுத்துப் பொடித்த சீரகத்தைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான சோயாபீன்ஸ் உருண்டைக் குழம்பு தயார். இதை சாதம், சப்பாத்தி ஆகியவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
குடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்க சோயா பயன்படுகிறது .
இரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலில் இரு தேக்கரண்டி சோயா மாவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.
சோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.
சோயாவில் புரதம், இரும்புச்சத்து இருக்கிறது. எனவே, இரத்த விருத்தியாகும்.
வைட்டமின்-‘பி’ உள்ளது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum