Top posting users this month
No user |
Similar topics
களி உருண்டை கறி குழம்பு
Page 1 of 1
களி உருண்டை கறி குழம்பு
மட்டன் - முக்கால் கிலோ
கேழ்வரகு மாவு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
முழுப்பூண்டு - ஒன்று
கத்திரிக்காய் - நான்கு
உருளைக்கிழங்கு - இரண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
கசகசா - இரண்டு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - இரண்டு துண்டு
இலவங்கம் - நான்கு
ஏலக்காய் - நான்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - அரைக்கோப்பை
கறியை சிறிதாக நறுக்கி அரைதேக்கரண்டி உப்பை போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை நான்காக வெட்டிக் கொள்ளாவும்.
இஞ்சி பூண்டை மையாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியதாக நறுக்கி வைக்கவும்.
புளியை கரைத்து வைக்கவும்.
தேங்காயுடன் அரைக்கவேண்டியதை சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
அகலமான ஒரு பாத்திரத்தை காய வைத்து எண்ணெயை ஊற்றி வாசனை பொருட்களை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி, பச்சைமிளகாயை போட்டு வதக்கி விட்டு தொடர்ந்து எல்லாப் தூள்களையும் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீரை தெளித்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு காய்கறிகளை கொட்டவும்.
பிறகு நன்கு கிளறி புளி கரைசலை ஊற்றி வெந்த கறியைக் கொட்டி, இரண்டு கோப்பை தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.
இதற்கிடையில் கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்புத்தூளை போட்டு தண்ணீரை தெளித்து பிடி கொழுக்கட்டை போல் மாவை பிடித்து வைக்கவும் அல்லது சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிறகு காய்கள் நன்கு வெந்தவுயுடன் கொழுக்கட்டைகளை மெதுவாக போட்டு அடுப்பின் அனலை குறைத்து வைக்கவும். கிளற கூடாது.
பத்து நிமிடங்கள் கழித்து இலேசாக கிளறவும். கொழுகட்டை நன்கு வெந்துள்ளதை உறுதி செய்து கொண்டு இறக்கி விடவும்.
அகலமான கோப்பைகளில் போட்டு சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum