Top posting users this month
No user |
Similar topics
பாகிஸ்தானுக்கு வழித்தவறிச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமியின் பெற்றோர் கண்டுபிடிப்பு
Page 1 of 1

லாகூருக்கு வழி தவறிச் சென்ற கீதா என்ற வாய் பேசாத, காது கேளாத இந்திய சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்துவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த கீதா என்ற வாய் பேசாத, காது கேளாத சிறுமி கடந்த 2003ம் ஆண்டு, Samjhauta Express ரயிலில் வழிதவறி பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு உள்ள எத்தி என்ற அறக்கட்டளை அவரை மீட்டு கராச்சிக்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் தான், கீதா பாகிஸ்தானில் இருப்பது இந்திய வெளியுறவு துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து இந்திய தூதரகத்தின் மூலம் கீதாவின் பெற்றோர் யார் என்ற தேடல் தொடங்கியது.
சிறுவயதில் காணாமல் போனதால் கீதாவினாலும் தன் பெற்றோர் பற்றிய அடையாளத்தை தெளிவாக கூறமுடியவில்லை.
இந்நிலையில் தற்போது கீதாவின் பெற்றோர்களாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்ட மூன்று குடும்பத்தினரின் புகைப்படங்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டது.
அந்த 3 புகைப்படங்களில் ஒன்றில் உள்ளவர்களை தன் பெற்றோர் என கீதா தெரிவு செய்ததை அடுத்து, அவரை இந்தியா அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கீதா இந்தியா திரும்பியதும் அவருக்கும், அந்த பெற்றோருக்கும் மரபணு சோதனை செய்யப்படும் என்றும் அந்த முடிவுகளுக்கு பின்னரே அவர்கள் கீதாவின் பெற்றோர்களா என்பது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் கணக்கில், கீதாவின் பெற்றோரை கண்டுபிடித்துவிட்டோம். மரபணு சோதனையை அடுத்து கீதா அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களையும் காணவில்லை: தந்தை பரபரப்பு புகார்
» ஜோதிடத்தை இனியும் நம்ப போவதில்லை: பாகிஸ்தானுக்கு கூறும் மகிந்த
» சிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum