Top posting users this month
No user |
Similar topics
ரோசி சேனநாயக்கவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகளை மீள கணக்கெடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரோசி சேனநாயக்க தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரோசி சேனநாயக்க சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார்.
எனினும் தான் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தனது விருப்பு வாக்குகளை திருடிவிட்டதன் காரணமாகவே தான் தோல்வியுற நேர்ந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணுவதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றையம் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் மனுவின் பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற அறிவித்தல் வழங்கிய பின்னர் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது சிறந்தது என்று நீதிபதிகள் ஒருமித்த கருத்து வெளிப்படுத்தியதன் அடிப்படையில் மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற அறிவித்தல் வழங்கியதன் பின்னர் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பதை எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரு சட்டமூலங்கள் மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum