Top posting users this month
No user |
Similar topics
திஸ்ஸ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1

தான் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் என அறிவிக்குமாறு அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போலியான ஆவணங்களை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டிருந்தார்.
இதனால் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு ஐ.தே.க நிர்வாக குழு தீர்மானித்தது.
இந்த தீர்மானம் குறித்து தனக்கு எழுத்துமூல ஆவணங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை என தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இது தொடர்பில் தனக்கு தெளிவூட்டுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளதுடன், இது தொடர்பில் கட்சியெடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும், தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் என அறிவிக்குமாறும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று ஈவா வனசுந்தர, புவனகே அளுவிகாரே, மற்றும் உபாலி அபேரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது இம் மனு தொடர்பில் பிரதிவாதிகள் அனைவருக்கும் அறிவக்குமாறு தெரிவித்து மனுமீதான விசாரணையை 19ம் திகதி வரை தள்ளிபோட்டது நீதியரசர்கள் குழு.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் பொது செயலாளர் கபீர் ஹாசீம், மற்றும் செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் மனுவின் பிரதிவாதிகளாக காணப்படுகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரு சட்டமூலங்கள் மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
» திஸ்ஸ மீதான விசாரணைகள் பெருமளவு நிறைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum