Top posting users this month
No user |
ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தவைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் சோமவீர சந்திரசிறி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுக்களை ஆராய்ந்த நீதியரசர்கள் விசாரணைகளை 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு பதிலாக தேர்தலில் தோல்வியடைந்த, எஸ்.பி. திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum