Top posting users this month
No user |
Similar topics
கேரட் பீன்ஸ் புட்டு
Page 1 of 1
கேரட் பீன்ஸ் புட்டு
தேவையானவை:
கேரட் – கால் கிலோ
பீன்ஸ் – 50 கிராம்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – அரைஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரைஸ்பூன்
மஞ்சள் தூள்- கால்ஸ்பூன்
சீரகத்தூள் -கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – பாதி
மல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும், பீன்ஸை மிகப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
பின்பு பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
துருவிய கேரட் சேர்த்து திரும்பவும் வதக்கவும்.
வதக்கிய கேரட் பீன்ஸ் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
கேரட், பீன்ஸ் வெந்து வதங்கிய பின்பு தேங்காய்ப்பூ, நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
பாதி எலுமிச்சைப் பழச்சாறு பிழியவும். திரும்ப நன்கு பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான கேரட் பீன்ஸ் புட்டு ரெடி.
விருப்பப்பட்டால் ஒரு வெங்காயம் தாளிக்க சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum