Top posting users this month
No user |
Similar topics
அணைக்கட்டுகளை சீர் செய்யாது அசமந்தப் போக்குடன் செயற்படும் அதிகாரிகள்: விவசாயிகள் விசனம்
Page 1 of 1

மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்திற்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்கால்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்று நீரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் 13ம் கட்டை வாய்க்கால் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை பூபாலன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கட்டுக்கரை குளத்திற்கு நீரை கொண்டு செல்லும் குஞ்சுக்குளம் தேக்கத்து அணைக்கட்டுக்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த அணைக்கட்டு தேதத்திற்கு உள்ளாகியுள்ளமையினால் குஞ்சுக்குளம் பாலமும் சேதமாகியுள்ளது.
கட்டுக்கரை குளத்தை நம்பி மன்னார் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் தற்போது குறித்த அணைக்கட்டுகள் உடைந்து காணப்படுகின்றமையினால் நீரை கட்டுக்கரை குளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த அணைக்கட்டுகளுக்கு மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் பொறுப்பாக உள்ள போதும் அத்திணைக்கள அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் கட்டுக்கரை குளத்திற்குச் செல்ல வேண்டிய நீர் சேதத்திற்கு உள்ளாகியுள்ள அணைக்கட்டினூடாக ஆற்று நீருடன் கலக்கின்றது.
இது மட்டுமின்றி குறித்த பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு குறித்த அணைக்கட்டுகளை சீர் செய்து கட்டுக்கரை குளத்திற்கு நீரை கொண்டு சென்று விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை தீர்த்து வைக்குமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுவதாக முருங்கன் 13ம் கட்டை வாய்க்கால் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை பூபாலன் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதியமைச்சின் அசமந்தப் போக்கினால் நிதிநெருக்கடியைச் சந்திக்குமா வடமாகாண சபை?
» கொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில்
» ஜனாதிபதி மைத்திரியை மீறி செயற்படும் தேவை உறுப்பினர்களுக்கு இல்லை: ரஞ்சித் டி சொய்சா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum