Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month


கொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில்

Go down

கொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் Empty கொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில்

Post by oviya on Thu Dec 17, 2015 1:34 pm

உர மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகளினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், முன்னோக்கி செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தில் தமது சலுகைகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னனியின் மேல் மாகாண சபையின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

"பணத்திற்கு பதிலாக உரம் வேண்டும்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது.

விவசாயிகளின் பாரம்பரிய ஆடையான கோவணத்தை அணிந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்து 500ற்கும் அதிகமான விவசாயிகள் கலந்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum