Top posting users this month
No user |
Similar topics
கிழக்கில் பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் விவசாயிகள் தங்களின் கைங்கரியத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் விவசாயிகள் தங்களின் கைங்கரியத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய கஸ்டங்களுக்குள்ளாகின்ற விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுடைய மாகாண சபைக்கு இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற விவசாயக் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் ஆற்றிய தலைமையுரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!
எக்காலத்திலும் சாயம் போகாத தொழில் இந்த விவசாயம் தான். எனவே தான் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்று பாராதியும் உழன்றும் ஏர் பின்னது உலகம் என்று வள்ளுவரும் உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோன் என்று புறநானூறும் புகழ்கின்றது.
அத்தனை ஆளுமைத் தன்மைகளையெல்லாம் தன்னுள்ளே அடக்கியிருக்கின்ற இந்த விவசாயத்தை முன்நிறுத்திய விவசாயக் கண்காட்சியை எமது கிழக்கு மாகாண சபை வருடா வருடம் நடாத்தி வருகின்றது.
பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த விவசாயக் கண்காட்சியை இவ்வருடம் என்னுடைய தலைமையில் என்னுடைய அமைச்சு மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இந்த வாய்ப்பினை இங்கு செயற்படுத்திக் காட்டுவதற்கான களமாக வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் அமைந்திருக்கின்றது.
இங்கே உள்ளே வந்து பார்க்கின்ற போது எமது அமைச்சின் எல்லா திணைக்களங்களும் கிழக்கு மாகாணத்திலே வேலை செய்கின்றனவா அல்லது வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்திலே வேலை செய்கின்றனவா என்று ஆச்சரியப்படும் வகையில் கேள்வி எனக்குள் எழுந்தது.
உண்மையிலேயே தங்களுடைய அத்தனை வேலைகளையும் முழுக் கிழக்கு மாகாணத்தில் செய்து கொண்டிருந்த அதே வேளையில் யாவரும் பிரமிக்கத் தக்க வகையில் இந்தக் களத்தினை அமைத்துக் கொடுத்த என்னுடைய அமைச்சினைச் சேர்ந்த எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் முகஸ்துதிக்காகவோ அல்லது வெறும் வார்த்தையாகவோ அல்ல உண்மைச் சொற்களாக உளமார நான் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கின்றேன்.
எமது பிரதேசத்தைப் பொறுத்த வரையில் இயற்கையோடு பல்வேறு போராட்டங்களை நடாத்திக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு தொழில் தான் விவசாயம். வெள்ளாமை அல்ல இது வல்லாமை என்று சொல்லுவார்கள். விவசாயிகள் இயற்கையோடு பல்வேறு விதமான போராட்டங்களை நடாத்திக் கொண்டு தான் இந்த உலகத்திற்கு சோறு போடுகின்றார்கள்.
அவர்கள் சேற்றில் கால் வைப்பதன் காரணத்தால் தான் நாம் சோற்றிலே கை வைக்கின்றோம் அவர்கள் எதிர்பார்த்த எத்தனையோ தொகையான இடர்பாடுகள் மழை பொய்ப்பது, வெள்ளப்பெருக்கு, காட்டு விலங்குகளினால் அழிவு, இப்போது நாள் குறைந்தாலும் வரவு குறையாத யானைகளின் தொல்லை, இவ்வாறு பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் தங்களின் கைங்கரியத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவையெல்லாம் எமது மாகாண சபையிலும் எங்கள் அமைச்சரவையிலும் அடிக்கடி விவாதிக்கப்படுகின்ற விடயங்கள் இத்தகைய கஸ்டங்களுக்குள்ளாகின்ற விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு எங்களுடைய மாகாண சபைக்கு இருக்கின்றது.
விவசாயத்தின் ஏற்ற தாழ்வுகளை எண்ணி ஏழை விவசாயி மனம் நொந்து கொண்டிருந்த காலம் எல்லாம் கடந்து இப்போது பல்வேறு விதமான உதவிகள் ஒத்தாசைகள் விவசாயிகளைத் தேடி வருகின்றன அவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் பல்வேறு விதமான வகையிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நவீன காலத்திற்கு ஏற்ற விதத்தில் எவ்வாறான செய்கைகளை எவ்விதத்திலே செய்திட வேண்டும் அதன் மூலம் எவ்வாறெல்லாம் பலனைப் பெற்றிடலாம் என்பவற்றை கண்முன்னே காட்டுகின்ற ஒரு களமாகாத்தான் இந்த கண்காட்சி அமைந்திருக்கின்றது.
எனவே எல்லா விவசாயிகளும் இதை வந்து பார்வையிட வேண்டும், அதற்கு மிக மூலமாக இருக்கக் கூடியவர்களான மாணவர்கள் முக்கிய பங்காற்றிட வேண்டும் என்பதற்காக நாம் எல்லா பாடசாலைகளுக்கும் இதில் பங்குபற்றுவதற்காண வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றோம். அந்த வகையில் கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்பினையும் கோரினோம் அது போல் எமது ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தை எமது கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வகையில் நாம் ஏற்பாடு செய்திருக்கின்ற இந்தக் கண்காட்சி மிக சிறப்பாக நடந்தேற இறைவனின் ஆசியுடன் அனைவரின் ஒத்துழைப்புகளும் வேண்டும் என்று தெரிவித்தார்.
நண்பலுடன் 6000க்கு மேற்பட்ட பார்வையாளர்களை தாண்டிய இரண்டாம் நாள் விவசாய கண்காட்சி
இரண்டாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும், விற்பனையும் கண்காட்சிக்கு இன்று நண்பகலுடன் 6000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட வருகைதந்திருப்பதாக ஏற்பாட்டக்குழு தெரிவித்தது.
கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் இ.துரைராஜாசிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாயிகள் கைப்பணியாளர்கள் மீன் வளர்ப்போர் கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர்களின் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு உரிய ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகமான பாடசாலை மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கண்காட்சியின் இறுதி நாளாகிய நாளைய தினம் அதிகளவான பார்வையாளர்கள் வருவார்கள் என தெரிவித்தனர். நாளைய தினம் சனிக்கிழமை என்பதால் பாடசாலை மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என அதிகளவில் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என நம்பப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்
» சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ
» கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்தது ஐ.நா. குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum