Top posting users this month
No user |
Similar topics
எலிகளின் வசிப்பிடமாக விளங்கும் கர்னிமாதா கோவில் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ளது எலி கோவில் என்று செல்லமாக அழைக்கப்படும் கர்னி மாதா கோவில்.
கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேஸ்நோக் என்ற பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
கர்னி மாதா என்பவர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் முனிவர் ஆவர். இவரை துர்க்கையின் அவதாரம் என்றும் சிலர் கூறுகின்றனர். இறைபக்தியில் மிகுந்த ஆர்வமுடைய கர்னி மாதா அருகில் உள்ள குகைக்கு சென்று இறைதவத்தில் மூழ்கி விடுவார்.
இந்நிலையில் ஒரு முறை இவரது தங்கையின் மகனான லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்து விடுகிறான்.
அவனின் உடலை கொண்டுவந்து அக்கா கர்னி மாதா முன் கிடத்தி தங்கை குலாபி அழத்தொடங்கினாள்.
இதையடுத்து கர்னி மாதா, தன் தங்கை மகனை மீட்டுத்தரும்படி எமனிடம் கெஞ்சுகிறாள்.
ஆனால் எமனோ அந்த பையனின் ஆன்மா வேறு பிறப்பெடுத்துவிட்டதால் இனி ஒன்றும் செய்யமுடியாது என கை விரித்துவிடுகிறார்.
இதனால் கோபமடைந்த கர்னி மாதா என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவரை நீ வேறு இடத்தில் பிறப்பெடுக்க வைக்க கூடாது.
அந்த உயிர்கள் எலிகளாக மறுபிறவியெடுத்து இங்கேயே என்னுடன் இருக்கவேண்டும் என எமனிடம் வரம் கேட்கிறாள்.
இப்படி பிறந்த எலிகள்தான் இங்கே ஓடியாடி விளையாடி கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் கர்னி மாதா தற்போது கருவறை இருக்கும் இடத்தில் 1538ம் ஆண்டு திடீரென மாயமாகி மறைந்து தெய்வமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான பக்தர்கள் வந்து அவரை தரிசித்து செல்கின்றனர். கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
எலிகள் சகஜமாக சுற்றி திரிவதற்காக சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் போட்டு வைத்திருக்கிறார்கள். மேலும் எலிகள் குடித்த பாலையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது. இந்த எலிக்கூட்டத்தின் இடையே வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக கூறப்படுகிறது.
இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றை பக்தர்கள் கொன்றுவிட்டால், தங்கத்தில் செய்யப்பட்ட எலியை கோவிலுக்கு வழங்குகின்றனர். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
» ஜெயலலிதா விடுதலை: மொட்டை அடித்துக் கொண்ட எம்.எல்.ஏ (வீடியோ இணைப்பு)
» விஷம் வைத்து கொல்லப்பட்ட சுனந்தா: திடுக்கிடும் தகவல் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum