Top posting users this month
No user |
மக்களிடம் ஒற்றுமையை போதிக்கும் உன்னத தர்கா (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது கமர் அலி தர்வேஷ் தர்கா.
புனே மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமமான கெட் சிவபூரில் அமைத்துள்ள இந்த தர்கா இந்திய அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெள்ளை மக்ரானா மற்றும் கருப்பு மார்பில் கற்களால் அழகிய கலை நயத்துடன் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது தான் இந்த தர்கா.
பிர் கமர் அலி தர்வேஷ் என்ற இஸ்லாமிய துறவி இங்கு வாழ்ந்து வந்தார்.
துறவத்துடன் அவர் உடற்பயிற்சி போன்றவைகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
அவர் இறந்த பின் தற்போது தர்கா இருக்கும் இடத்தில் தான் புதைக்கப்பட்டார்.
அவரின் நினைவாகவே இந்த தர்காவுக்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இந்த தர்காவின் உள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கமர் அலி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த தர்காவில் வட்ட வடிவில் கல் ஒன்றும் உள்ளது. இந்த தர்காவின் சிறப்பே இந்த கல் தான் என்று கூறப்படுகிறது.
அதாவது, சுமார் 70 கிலோ எடையுள்ள இந்த கல்லை 11 பேர் கொண்ட குழுவினார் ஒன்றாக கூடி துறவி கமர் அலியின் பெயரை கூறினால் வெறும் ஆல்காட்டி விரலால் உயரமாக தூக்கி வீசலாம் என்று நம்பப்படுகிறது.
எனினும் விஞ்ஞான ரீதியாக இது சாத்தியம் தான் இதில் மந்திரம் எதுவும் இல்லை என்றும் பலர் கூறுகின்றனர்.
இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது அவரவர் நம்பிக்கை.
ஆனால் எவ்வளவு கடின காரியமான செயலாக இருந்தாலும் ஒன்றாக இணைந்து செய்தால் எளிதாக செய்துவிடலாம் என்பதே இதன் உட்பொருள்.
அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து மதங்களின் தத்துவம். அதை அறிந்து வாழ்ந்தாலே வாழ்வில் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கு இடமிருக்காது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum