Top posting users this month
No user |
Similar topics
இந்தியர்களுடன் மாயமான மலேசியக் கப்பல் கண்டுபிடிப்பு: இயந்திர பழுது காரணமாக திசை மாறியதாக தகவல்
Page 1 of 1

தெற்கு சீன கடல் எல்லையில் இந்தியர்களுடன் காணாமல் போன மலேசிய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவுப் பொருள்கள், இரும்புக் குழாய்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு, எம்.வி. சாஹ் லியான் என்ற சரக்குக் கப்பல், மலேசியாவின் குச்சிங் துறைமுகத்தில் இருந்து லிம்பங் துறைமுகத்துக்கு கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றது.
அந்தக் கப்பலில் இந்தியர்கள் உள்பட 14 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி அந்த கப்பல் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது.
அந்தக் கப்பலை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கப்பலின் உரிமையாளரும் புகார் கொடுத்திருந்தார். தெற்கு சீன கடல் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் அந்த கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, மலேசிய கடல்சார் பாதுகாப்புத் துறையினர், மாயமான அந்தக் கப்பலைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தான்ஜுங் பாரம் பகுதியில் இருந்து 26 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள மீரியில் அக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மலேசிய கடல்சார் பாதுகாப்புதுறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, உள்ளூர் நேரப்படி 4.40க்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக கப்பல் அப்பகுதிக்கு சென்று விட்டது.
கப்பலின் மாலுமியுடன் தொடர்புகொண்டு பேசியபோது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)
» பொலிஸ் அதிகாரி மற்றும் இரு விமானிகளுடன் மாயமான ஹெலிகொப்டர் வனப்பகுதியில் கண்டுபிடிப்பு
» சுனந்தா கொலை வழக்கு: மாயமான தடயங்கள்….அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum