Top posting users this month
No user |
Similar topics
சாலையில் அடிபட்டு கிடந்தவரின் உயிரை காப்பாற்றிய நடிகர் சரத்குமார்
Page 1 of 1

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை, நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அக்னிமாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(33).
கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மதியம் ஆலங்குளம்– தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மலைராமர் கோவில் நுழைவுவாயில் அருகே வந்தபோது, அந்த வழியே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவர் நடுரோட்டில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
அந்த வழியே சென்றவர்கள் இதனை பார்த்து 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவசர ஊர்திக்கு வர தாமதமானது.
இந்நிலையில் அந்த வழியாக நடிகர் சரத்குமார் எம்.எல்.ஏ. நெல்லையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தென்காசி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து தனது காரை நிறுத்தி என்னவென்று கேட்டுள்ளார்.
அப்போது விபத்தில் சிக்கி ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தகவல் அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து விபத்தில் காயமடைந்து கிடந்த முத்துக்குமாரை தனது காரிலேயே ஏற்றிக்கொண்டு நடிகர் சரத்குமார் ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
மேலும் முத்துக்குமாருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுகிறது என அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறியதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுதொடர்பாக நடிகர் சரத்குமார் கூறியதாவது, விபத்தில் சிக்கியவர்களுக்கு தகுந்த நேரத்தில் முதலுதவி கிடைத்தால் உயிரிழப்பை தடுக்கலாம்.
அதற்கு பொதுமக்கள் உதவவேண்டும். யார் விபத்தில் சிக்கினாலும் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்க்க வேண்டியது நமது கடமை என்று கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த சரத்குமார்
» 25 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்த சிறுமி: உயிரை காப்பாற்றிய வீரச்சிறுவன்
» 5 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய மூளைச் சாவடைந்த 3 வயது சிறுமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum