Top posting users this month
No user |
Similar topics
சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய பன்னீர்செல்வம்: வாய்விட்டு சிரித்த திமுக எம்.எல்.ஏக்கள்
Page 1 of 1

பாலங்கள் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ பேசியதை கிண்டலடித்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்
தி.மு.க வேலு
ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சியில் மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி, 'பேக்கேஜ்' முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போட்டி இருந்தால் தான் பணிகள் முறையாக நடக்கும், தரமான சாலைகள் அமைக்கப்படும். ஒரே ஒரு ஒப்பந்ததாரரிடம் பணியை ஒப்படைத்த காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் தான், பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கடந்த ஆட்சியில் ஒப்பந்த பணிகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. போதுமான இயந்திரங்கள் இல்லாமல் பலரும் பணியை பெற்றனர். துணை ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை ஒப்படைத்தனர்.
கட்டபஞ்சாயத்து அளவிற்கு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்தது. இதனால், சாலைப்பணி தரமாக நடக்கவில்லை. தற்போது, 'பேக்கேஜ்' முறையில், சாலைப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது, இந்த ஆட்சியில் மட்டுமல்ல தி.மு.க ஆட்சியில், 106 பாலங்கள் கட்டும் பணி 'பேக்கேஜ்' முறையில் நடந்துள்ளது.இதற்கு பல நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
குறிப்பாக சாலைப்பணி மேற்கொள்ள தேவையான இயந்திரங்கள் உள்ளதா என்று தெரிந்த பிறகே ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
அமைச்சர் பன்னீர்செல்வம்
உண்மைக்கு மாறான தகவல்களை வேலு கூறுகிறார். முழு பூசணிக்காயை, சோற்றில் மறைக்க பார்க்கிறார். அவர் சொல்வது இங்கு எடுக்காது, எடுபடாது.
பாலங்களை தி.மு.க கட்டியதாக கூறுகிறார். பாலங்களை பற்றியே அவர் அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறார். பாலத்தில் இருந்து அவர் சாலைக்கு இறங்கி வரவேண்டும்.
(பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியதால் சபையில் சிரிப்பலை எழுந்தது, தி.மு.க. எம்.எல்.ஏக்களும் சிரித்தனர்).

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேமுதிக சஸ்பெண்ட்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு….சட்டசபையில் அமளி துமளி
» குலுங்க குலுங்க சிரித்த குஷ்பு: களைகட்டிய காங்கிரஸ்
» சட்டசபையில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: அதிரடி சஸ்பெண்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum