Top posting users this month
No user |
தேமுதிக சஸ்பெண்ட்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு….சட்டசபையில் அமளி துமளி
Page 1 of 1

தமிழக சட்டசபையில் இருந்து தேமுதிக-வினர் சஸ்பென்ட் செய்யப்பட்டதையடுத்து, சட்டசபையில் அமளி துமளி ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் நேற்று சபையின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி தேமுதிக உறுப்பினர்கள் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்
மேலும் அடுத்த கூட்டத் தொடரிலும் தேமுதிக-வினர் சிலர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் அடுத்த கூட்டத் தொடரிலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவது என்ற தண்டனை மட்டும் நீக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், சட்டசபையில் தேமுதிக-வினர் நடந்த விதம் குறித்த வீடியோ காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படுவதால் நடவடிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே தவிர, யாருடைய கோரிக்கையையும் ஏற்று திருத்தம் செய்யப்படவில்லை.
ஆனால் தேமுதிக-வினர் மீதான தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டனர், இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் சபையில் பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை நிறுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதில் அதிருப்தி அடைந்த கணேஷ்குமார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum