Top posting users this month
No user |
Similar topics
மரத்தின் பிஞ்சு வகை
Page 1 of 1
மரத்தின் பிஞ்சு வகை
வாழை பிஞ்சு:
துவர்க்கின்ற வாழைப்பிஞ்சுக்கு இரத்த கடுப்பு, இரத்தமூலம், அதிக அளவில் சிறுநீர், வயிற்று கோளாறுகள் ஆகியவற்றை போக்கும்.
பலா பிஞ்சு:
தாகமும், பித்தம் நீங்கும். சலம், மந்தாக்கினி, குன்மம் ஆகியவை உண்டாகும்.
அத்தி பிஞ்சு:
மூல வாயுவும், இரத்த மூலமும், வயிற்று கடுப்பும் நீங்கும்.
முருங்கை பிஞ்சு:
பக்குவம் செய்து தோலுடன் சாப்பிட்டால் சுரம், எலும்பை உலுக்குகிற வெப்பம், விந்து நஷ்டம் ஆகியவை நீங்கும்.
நாரத்தங் கச்சல்:
இதை போஜன கஸ்தூரி என்று கூறுவர். இவற்ரால் சீதளம், அரோகம், வயிற்று பொருமல், கிருமி ஆகியவை நீங்கும். சுக்கில தாதுவும், தீபாக்கினியும் உண்டாகும். உணவை அதிகம் உட்செலுத்தும்.
மாதுளம் பிஞ்சு:
மலம், சீதம், கலம், இரத்தம் ஆகிய பற்பல அதிசார ரோகங்கள் அகலும்.
முகிழ் விரியாத கத்தரி பிஞ்சு:
இதனால் சுரம், பித்த தாஷம், கபம் ஆகியவை நீங்கும். மலம் இளகி இறங்கும். குரல் தொனி வலிமையாகும்.
அவரை பிஞ்சு:
இரவு உணவுக்கும், மருந்து சாப்பிடுபவர்களுக்கும் நல்லது. வாதாதி முத்தோஷமும், விரணம், சுரம் ஆகியவை குறையும்.
மாம் பிஞ்சு:
இதை சூதப்பிஞ்சு என்றும் கூறுவர். மாம் பிஞ்சால் கிளைத்த வாதாதி முத்தோஷங்கள், அரோசகம், சர்த்தி அக்கினி மந்தம் ஆகியவை குறையும்.
இத்திக்காய் பிஞ்சு:
அதிசாரமும், பெரும்பாடும், உள் சூட்டால் பிறக்கின்ற பிணிகளும் நீங்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum