Top posting users this month
No user |
Similar topics
பிஞ்சு சோளம் பொரியல்
Page 1 of 1
பிஞ்சு சோளம் பொரியல்
தேவையான பொருள்கள்:-
பிஞ்சு சோளம் – 10 நம்பர்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1கப் பொடியாக நறுக்கியது
தக்காளி – 1நம்பர்
பச்சை மிளகாய் – 3நம்பர்
புளித்தண்ணீர் – 2ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1/4 கப்
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1/4 கப் பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை – 1கொத்து
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிதளவு
செய்முறை :-
முதலில் பிஞ்சு சோளத்தை தோலை உரித்து நன்கு அலசி 4 பாகமாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை வெந்நீரில் வேகவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலையும் மிக்ஸியில் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்நிறம் வரும்வரை வதக்கவும். நன்கு வதக்கியவுடன் நறுக்கிய சோளத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய பின்பு பச்சை மிளகாய், மிளகாய் பொடி போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் அரைத்த தக்காளி விழுது, அரைத்த தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சுருங்கி வரும் வரை வதக்கவும். நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து கீழே இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.
சுவையான பிஞ்சு சோளம் பொரியல் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum