Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

Go down

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்  Empty நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

Post by oviya Thu Aug 27, 2015 3:05 pm

நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டுவதற்கு, நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு:

ரஜினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.



முதல் இணைப்பு:

நடிகர் சிவாஜி கணேசன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சொந்தமானவர் என்று முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, விதி எண் 110-ன் கீழ் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தம் கொண்டாடி பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

ஜெயலலிதா பேசுகையில், பேரவைத் தலைவர் அவர்களே, நடிகர் திலகர் சிவாஜி கணேசன் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல.

அவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர்.

ஆகவே, அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முற்பட வேண்டாம் என்று உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum