Top posting users this month
No user |
Similar topics
திடீரென தீப்பிடித்த கால்டாக்ஸி: வெளியே குதித்து உயிர் தப்பிய பெண் பயணி
Page 1 of 1

டெல்லியில் கால்டாக்ஸி ஒன்று பயணத்தின்போது தீப்பிடித்து எரிந்த போது, அதில் பயணித்த பெண் ஒருவர் வெளியே குதித்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த செவ்வாய் இரவு, ஒரு பெண் டாக்ஸியில் வீடு திரும்பிய போது கார் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஓடும் காரிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் கபில் ”ஈசி கேப்ஸ்” நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எனது மனைவி பயணித்த கார், விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென நின்றுள்ளது.
ஓட்டுநர் மீண்டும் காரை இயக்கிய சிறிது நேரத்தில் காரில் தீப்பிடித்துள்ளது.
இதையடுத்து, காரிலிருந்து குதித்த எனது மனைவிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இனி "கார்' என்ற வார்த்தையை கேட்டாலே பயப்படும் அளவுக்கு அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், கால்டாக்ஸியை இயக்கும் நிறுவனங்கள், தங்களது கார்களை முறையாக பராமரிக்கின்றனவா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
"ஈசி கேப்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறினால் காரிலிலிருந்து புகை வந்துள்ளது.
இதையடுத்து, கபில் மனைவியை வேறு காரில் அனுப்ப மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் அவர் காரிலிருந்து குதித்துவிட்டார்.
கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்ததாக கூறப்படுவது தவறான தகவல்.
அந்த காரில் 2 நாள்களுக்கு முன்னர்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிர் தப்பிய 349 பேர்…..கண்ணீர் மல்க வரவேற்பு
» நேபாளத்தில் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை: உயிர் தப்பிய இந்திய தொழிலாளர் உருக்கம்
» ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum