Top posting users this month
No user |
ராய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய வங்கதேச விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 173 பயணிகள்
Page 1 of 1

வங்கதேச விமானம் ஒன்று தொழிட்நுட்ப கோளாறு காரணமாக ராய்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யுனைடெட் பங்களாதேஷ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்கு புறப்பட்டது. இதில் 173 பயணிகளும், ஊழியர்களும் பயணம் செய்தனர்.
இந்நிலையில் வானில் பறந்துக் கொண்டிருக்கும் போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதனால் விமானம் பெரும் விபத்துக்குள்ளாகும் சூழலை அறிந்த விமானி ராய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே ராய்ப்பூரின் விவேகானந்தா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.
விமானியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும், ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum