Top posting users this month
No user |
உயிர் தப்பிய 349 பேர்…..கண்ணீர் மல்க வரவேற்பு
Page 1 of 1

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 349 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.
ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள 4 ஆயிரம் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக சென்ற ஐ.என்.எஸ். சுமித்ரா கடற்படைக் கப்பல் 349 இந்தியர்களுடன் கடந்த 31 ஆம் திகதி இரவு ஏமனில் இருந்து புறப்பட்டது.
இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 220 ஆண்கள், 101 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் என 349 பேர் அடங்குவர். இதில் 40 பேர் தமிழர்கள் ஆவர்.
மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய இவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றுள்ளனர்.
ஏமனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.
மேலும், மக்கள் கூடும் இடங்கள் பள்ளிகளில் குண்டு வீச்சு நடைபெறுவதால் ஏமனில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum