Top posting users this month
No user |
Similar topics
லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை
Page 1 of 1

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் லஞ்சப்பணத்தை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, படுக்கை அறை போன்ற இடங்களில் பதுக்கி வைத்தது அம்பலமாகியுள்ளது.
ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் பிரணாப் என்பவர் மீது கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பிரணாப்பின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்திய போது, அவரது வீட்டில் படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது.
மேலும், வீட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிப்பறையிலும், குளியல் அறையின் மேல் பகுதி, மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பிலும், பால்கனியின் தரைத் தளத்திலும் பணம் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சுமார் 21 மணி நேர சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் காவல்துறையினர் நிரப்பியுள்ளனர்.
ஆனால், அவர்களால் பணத்தை எண்ண முடியாத காரணத்தால், பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ.24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது.
மேலும், தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து தப்பியோடிய பொறியாளர் பிரணாப்பையும், சோதனையின்போது தாக்க முயன்ற பிரணாப்பின் மகன் தமோயுவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி? டெல்லி பொலிசார் அதிரடி சோதனை
» குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு பொலிசார் தரும் நூதன தண்டனை
» ஜெயலலிதா அரசு ஊழியர் அல்ல…பப்ளிக் சர்வண்ட்: வித்தியாசமான தமிழக அரசியல்வாதிகள்: நீதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum