Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா அரசு ஊழியர் அல்ல…பப்ளிக் சர்வண்ட்: வித்தியாசமான தமிழக அரசியல்வாதிகள்: நீதிபதி
Page 1 of 1

கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங், 'மெடோ அக்ரோ பார்ம்' நிறுவன வழக்கில், தமிழக கூடுதல் வேளாண் துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் சாட்சியத்தில் கூறியதை படித்தார்.
மெடோ அக்ரோ பார்ம் நிறுவனத்துக்காக, சிவா, ஜெயராமன் ஆகியோர், திருநெல்வேலி மாவட்டம், வீராங்குளம், சேரகுளம் ஆகிய கிராமங்களில், 1,300 ஏக்கர் நிலம் வாங்கினர்.
காஞ்சிபுரம் வெளகாபுரத்தில், 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது என்று படித்து விட்டு, இந்த நிலத்தை வாங்க, ஜெயலலிதா, தன் பணத்தை, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு கொடுத்தார் என, கூறினார்.
நீதிபதி: ஜெயலலிதா பணம் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா, 'செக், டிடி' என, ஏதாவது கொடுத்துள்ளாரா.
அரசு வழக்கறிஞர்: ஜெயலலிதா, அரசு ஊழியர்.
நீதிபதி: அரசு ஊழியரல்ல. 'பப்ளிக் சர்வண்ட்', சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பப்ளிக் சர்வண்ட் அல்ல. அவர்கள் சொத்தை, எதற்காக, ஜெயலலிதா சொத்துடன் சேர்த்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்கிறீர்கள். ஊழல் செய்து பணம் சம்பாதித்ததாக கூறும் நீங்கள், எங்கு லஞ்சம் வாங்கினார்; அப்போது, யாராவது பிடித்து, வழக்கு பதிவாகியுள்ளதா.
அரசு வழக்கறிஞர்: பதிலளிக்காமல் மவுனம் சாதித்து விட்டு, நமது எம்.ஜி.ஆர்., நாளிதழுக்கு, 14 கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது சட்ட விரோதம்.
நீதிபதி: இந்த பணம், திரும்ப கொடுக்கப்பட்டு விடும். சில, ஆங்கில நாளிதழ்களும் டிபாசிட் வாங்குகின்றன. சில அலுவலகத்தில், மாதம், 2,000 ரூபாய் என, சீட்டு பிடிக்கிறார்களே; அது சரியா.
அரசு வழக்கறிஞர்: அதுவும், சட்ட விரோதம் தான்.
நீதிபதி: 1996ல், 66 கோடி ரூபாய் என்பது பெரிய தொகை. இந்த தொகையை, எப்படி கண்டு பிடித்தனர். இந்த தொகை கட்டடமாக உள்ளதா, ஆம், என்றால், சென்னையிலா, மும்பையிலா, எங்குள்ளது, பணமாக இருந்தால் எங்குள்ளது.
கடந்த,1965 ம் ஆண்டு முதல், ஜெயலலிதா, சினிமாவில் நடித்து சம்பாதித்துள்ளார். அரசியலுக்கு அவர் எப்போது வந்தார். அவர்கள், வருமான வரி செலுத்தியுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்; திருடிய பணத்துக்கு கூட, வருமான வரி செலுத்துகின்றனர். அதையெல்லாம், நேர்மையான வழியில் சம்பாதித்த சொத்து என்று எடுத்து கொள்ள முடியுமா.
ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: கடந்த, 1982 ல், எம்.ஜி.ஆர்., இருந்த போதே, அரசியலுக்கு வந்தார்.
நீதிபதி: தமிழக அரசியல் வாதிகளே வித்தியாசமானவர்கள். திமு.க.,- அ.தி.மு.க., வுக்கு தனியாக சேனல்கள், நாளிதழ்கள் உள்ளன. முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில், அன்பழகன், தன் எழுத்து மூல வாதத்தில் என்ன சொல்லியுள்ளார்.
அரசு வழக்கறிஞர்; ஊழல் தடுப்பு பொலிசார் கூறியுள்ள குற்றச்சாட்டை, அவர்களும் விளக்கியுள்ளனர்.
நீதிபதி: வருமானத்துக்கும், சொத்து மதிப்புக்கும் இடையே எத்தனை சதவீதம் கைவிடப்பட்டன.
அரசு வழக்கறிஞர்; சதவீதம் குறிப்பிடப்படவில்லை. முந்தைய நீதிமன்றத்தில், இந்த பிரச்னை எழவில்லை.
நீதிபதி: 66 கோடி ரூபாய் எங்குள்ளது என்று நிரூபிக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர்: ரிவர்வே அக்ரோ கம்பெனியில், மூன்று லட்சம் ரூபாய் பங்கு உள்ளன.
நீதிபதி: 66 கோடி ரூபாய் எங்கே. மூன்று லட்சம் ரூபாய் எங்கே. ஊழல் தடுப்பு போலீசார் குறிப்பிட்டுள்ள, 66 கோடி ரூபாய்க்கான சொத்து எங்குள்ளது என்பதை நிருபிக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது எப்படி சோதனை நடத்தலாம்: நீதிபதி குமாரசாமி
» லஞ்சப்பணத்தை வீட்டில் நூதன முறையில் பதுக்கிய அரசு ஊழியர்: பொலிசார் அதிரடி சோதனை
» ஜெயலலிதா வழக்கில் தலையிட நீங்க யார்? சாமியின் வாயடைத்த நீதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum