Top posting users this month
No user |
ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1

ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
மகராஸ்டிராவில் தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி இரவு பணிக்காக நிறுவனம் ஏற்பாடு செய்த வாடகை வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுனரும், அவரது நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அடையாளம் தெரியாமலிருக்க, அவரது முகத்தை கத்தியால் குத்தி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக ஓட்டுனர் புருசோத்தம் போரடே மற்றும் அவரது நண்பர் பிரதீப் கோகடே ஆகியோர் மறுநாளே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த புனே செசன்ஸ் நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், இந்த தண்டனையை கடந்த 2012–ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
பின்னர் குற்றவாளிகள் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, குற்றவாளிகள் இருவரின் மரண தண்டனையை நேற்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum