Top posting users this month
No user |
Similar topics
உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை: நோயாளி உயிரிழந்ததால் சர்ச்சை
Page 1 of 1

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையில், நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஷோபா ராம், கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சம்பந்தபட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடந்த 31ம் திகதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஜப்பானில் உள்ள புற்றுநோய் மற்றும் தொற்றுநோய்கள் தடுப்புமையத்தின் மருத்துவர் கோரோ ஹோண்டா என்பவரின் தலைமையில் இந்திய மருத்துவர்களின் உதவியோடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த அறுவைச் சிகிச்சை, கருத்தரங்கம் ஒன்றிற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த அறுவைச் சிகிச்சையின் போது ஷோபா ராமின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால், சிகிச்சை முடிந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஷோபாராமின் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது அவரது உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியது.
இரத்தப் போக்கை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்து அவரை அவசர சிகிச்சை பகுதிக்கு மாற்றினோம்.
ஆனால் அவரது கல்லீரல் முழுமையாக பாதிப்படைந்ததால் துரதிஷ்டவசமாக அவர் உயிர் இழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே ஷோபா ராம் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உலகளவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை: நோயாளி உயிரிழந்ததால் சர்ச்சை
» அவுஸ்திரேலிய நாளிதழில் இந்தியர்களை கேலி செய்து கார்ட்டூன்: உலகளவில் வலுக்கும் கண்டனம்
» தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum