Top posting users this month
No user |
அவுஸ்திரேலிய நாளிதழில் இந்தியர்களை கேலி செய்து கார்ட்டூன்: உலகளவில் வலுக்கும் கண்டனம்
Page 1 of 1

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாளிதழ் ஒன்று பருவ நிலை மாநாட்டில் இந்தியாவின் செயல்பாட்டை முன்னிட்டு இந்தியர்களை கேலி செய்யும் விதமாக கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
பாரீசில் சமீபத்தில் நடந்த பருவ நிலை மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலி செய்யும் விதமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி நாளிதழான ‘தி ஆஸ்திரேலியன்’ கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பசியில் வாடும் இந்தியர் ஒருவர் சோலார் பேனல்களை சுத்தியலால் உடைத்து தின்பது போன்றும் மற்றொரு இந்தியர் மாங்காய் சட்னியை தொட்டு சாப்பிட்டால் மேலும் சுவை கூடும் என்று கூறுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கார்ட்டூனில் உள்ள சோலார் பேனல் பெட்டியில் ஐ.நா. வின் இலச்சினையும் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. ‘பில் லிக்’ என்பவர் இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த கார்ட்டூன் உலகளவில் பெரும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் சமூக ஆர்வலர்கள் இனவெறி நிரம்பிய கார்ட்டூன் என்று இந்த கார்ட்டூனை சாடியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum