Top posting users this month
No user |
Similar topics
அரச ஊழியர்கள் அரசியல்வாதிகளின் ஊழியர்களா?
Page 1 of 1

இலங்கையில் சுமார் 10 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றார்கள். ஜனநாயக நாடு ஒன்றிற்கு இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
இத்தகைய அரச ஊழியர்களில் அரைவாசிப் பேர் எல்லாத் தேர்தல் காலங்களிலும் அரசியல் இலாபத்திற்கு பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், தற்பொழுது நடை பெறப்போகின்ற பொதுத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் அதிக முன்னுரிமை கொடுக்கின்ற விடயங்களில், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு பிரதான தலைப்பு செய்தியாக காணப்படுகின்றது.
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு இது பழமொழி. இலங்கை தேர்தலின் வெற்றிக்கு கற்றவர்கள்தான் பொறுப்பு இது புதுமொழி. ஏன் அதனை தேர்தலின் தலைவிதி என்று கூட கூறலாம்.
அரச ஊழியர்கள் பலவிதம் இருக்கின்றார்கள். முதலாவது தான் படித்த கல்விக்கு ஏற்றவகையில் நியாயமான முறையில் அரச பதவிகளை பெற்றவர்கள்.
இரண்டாவது அரசியல்வாதிகளின் கால்களைப் பிடித்து, தேர்தல் காலங்களில் அவர்களுக்கு கொடி பிடித்ததன் மூலம் அரச பதவிகளை பெற்றவர்கள்.
மூன்றாவது அரசியல் செல்வாக்குகளின் மூலம் அரச பதவிகளை பெற்றவர்கள்.
இலங்கையை பொறுத்தவரை சமீபகால தரவுகளின்படி அரச பதவிகளை பெறவேண்டுமானால் ஒன்று நன்றாக படித்து வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு, கடினமான முறையில் பெறலாம். அல்லது ஒரளவு படித்து விட்டு அரசியல்வாதிகளுக்கு சேவை செய்வதன் ஊடாக இலகுவாக பெறலாம்.
அல்லது நன்றாக படித்து விட்டு பல வருடங்கள் காத்திருந்து பெறலாம். இவ்வாறாக இலங்கையினை பொறுத்தவரை அரச ஊழியர்கள் என்பதை விட அரசியல்வாதிகளின் ஊழியர்கள்தான் ஐம்பது சதவீதம் இருக்கின்றார்கள்.
இதனால்தான் தேர்தல் காலங்களில் அரச ஊழியர்கள் அதிக கவனத்தினை பெறுகின்றார்கள்.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 10000 ரூபாய் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் எனக்கூறப்பட்டது.
அதனைப்போல இப்பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 25000 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் எனகூறப்பட்டுள்ளது.
அதனைப்போல அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த நாட்களில் தெரிவித்திருந்தார்.
அதனைப்போல கடந்த மே மாதம் அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்பணம் ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கபட்டிருந்தது.
மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது அரச ஊழியர்களுக்கு 25000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏலவே கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அரச ஊழியர்களை கவருவதற்காக 50000 ரூபாய் முற்பணத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறு வழங்கப்பட்டிருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அரச ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் மக்கள் விடுதலை முன்னணி கூறும் பொழுது மகிந்த தற்பொழுது அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபா அதிகரிக்க போவதாக கூறுகிறார்.
தனது ஆட்சிக்காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதத்தை கூடசேர்க்காத தலைவர்தான் தற்போது அடிப்படைச் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாகவும் இது நகைச்சுவைக்குரிய விடயம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு பார்க்கின்ற பொழுது இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளாக இருக்ககூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் வெறுமனே தனது வாக்கு பலத்தினை அதிகரிக்கவே இத்தகைய சேவைகளை செய்கின்றன. இவையனைத்தும் ஏன் தேர்தல் காலங்களிலும் மட்டும் நிகழ்த்தப்படுகின்றன என்ற கேள்வி எழுப்பினால் உண்மைபுரியும்.
இதனை அரச ஊழியர்கள் நன்கு உணரவேண்டியது கட்டாயமாகும்.
அரச ஊழியர்கள் என்பதற்காகத் தான் சம்பளம். அரசியல்வாதிகளின் ஊழியர்கள் இல்லை என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் தொடர்பாக வைத்திருக்கின்ற சிந்தனைப் போக்கினை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அரச ஊழியர்கள் மாற வேண்டியகாலம் இனியாவது பிறக்கட்டும். கட்டாயம்பிறக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
» வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
» டிக்கோயா நகர சபை ஊழியர்கள் ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum