Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Go down

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் Empty பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Mar 12, 2015 1:14 pm

மட்டக்களப்பு நகரில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகளை பூட்டி இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கட்டிட தொகுதிக்குள் நுழைந்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் அங்கு கடமையில் இருந்த முகாமையாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் ஊழியர்களையும் திட்டியதாகவும் ஊழிர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வர்த்தக நிலைய தொகுதிக்குள் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவி முறையற்ற வகையில் வர்த்தக நிலையங்களைப் பெற்றுள்ளதுடன் இரண்டு வருடமாக அதற்கான வாடகைகளையும் செலுத்தவில்லையெனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்பின் பேரில் அங்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் வழங்கிய உறுதிமொழியையடுத்து பணி பகிஸ்கரிப்பு போராட்டம் நிறுத்தப்பட்டு அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகள் திறக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum