Top posting users this month
No user |
தீர்வின்றி தவிக்கும் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள்
Page 1 of 1

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் மூன்றாவது நாளாக நிலுவையில் உள்ள தங்களது நான்கு மாத சம்பளப் பணத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர்.
தங்களது கோரிக்கைக்கு இதுவரைக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். திங்கள் கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் பின்னர் சாலை மறியல் போராட்டமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை கொழும்பு வீதியின் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் ஓரு பந்தல் ஒன்றை அமைத்து 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமர்ந்திருந்து மௌனமான முறையில் உண்ணா விரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது போராட்டத்திற்கு சாதகமான பதில் ஒன்று சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறை அமைச்சிடம் இருந்து கிடைக்கும் பட்சத்திலேயே தமது உண்ணா விரதப் போராட்டத்தினை கைவிடப்போவதாக காகித ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏதும் அற்ற அரசியல் அனாதைகளாக வீதியில் வந்து போராட்டம் நடத்துவதற்குரிய சூழ்நிலையினை ஆலை முகாமைத்துவம் மற்றும் இது தொடர்பான அமைச்சும் ஏற்படுத்தியுள்ளமையினை நினைத்து தாங்கள் கவலையடைவதாக உண்ணா விரதத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிதி அமைச்சரே தடைப்பட்டுள்ள 4 மாத சம்பளப் பணத்தை உடன் வழங்க ஆணையிடுங்கள், கைத்தொழில் அமைச்சரே காகித ஆலை சீராக இயங்க முடியாவிட்டால் எம்மை கட்டாய ஒப்பந்த திட்டத்தில் அனுப்ப முடிவெடு, கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களே காகித ஆலையின் கடமையாற்றும் 300 தொழிலாளாகளின் நிலமையை பற்றி சற்று சிந்தியுங்கள்,
ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் பனிக்கொடை போன்றவற்றை வழங்க அரசே நடவடிக்கை எடு, துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினை வழங்க நடவடிக்கை எடு என்பன் போன்ற பல வாசகங்களை கையில் ஏந்தியவாறும். பந்தலில் காட்சிப்படுத்திவாறும் உண்ணா விரதத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது ஆலை தொடர்பான விடயங்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதாக கூறி ஏமாற்றி வருவதாக உண்ணா விரதத்தில் ஈடுபட்ட தொழிலாலாளர்கள் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum